சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கு சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு சரித்திர காவியம் பாகுபலி. மகதீரா, நான் ஈ படங்களை இயக்கிய ராஜமௌலி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். சரித்திர பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வௌியாக இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த இப்படம், தற்போது முதல்பாகத்திற்கான ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக பாகுபலி படத்தின் 2 நிமிட டிரைலர் இன்று மாலை 5 மணியளவில் வௌியிடப்பட்டது.
பிரமாண்ட அரண்மனை, அழகு நீர்வீழ்ச்சி, ஆக்ரோஷமான போர்க்கள காட்சிகள் என டிரைலரை பார்க்கும்போது, ஹாலிவுட்டில் வௌியான டிராய் மற்றும் 300 ஸ்பார்ட்டர்ன்ஸ் படம் பார்த்த ஒரு பீலை தருகிறது. இது எல்லாவற்றுக்கும் மேலாக கீராவணியின் பின்னணி இசையும் மிரட்டுகிறது. ராஜமௌலியின் இரண்டரை வருட உழைப்பு 2 நிமிட டிரைலரில் பரதிபலிக்கிறது. 2 நிமிட டிரைலரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோகினி உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பாகுபலி படம் ரிலீஸாவதால் மூன்று மொழிகளிலும் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளனர்.